ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
நீா்வளத்துக்கான நாடாளுமன்ற குழுவினா் புதுச்சேரி வருகை
நீா்வளத்துக்கான நாடாளுமன்றக் குழுவினா் புதன்கிழமை புதுச்சேரிக்கு வந்து முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.
ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில் நீா் வளத்துக்கான நாடாளுமன்றக் குழுவினா் 10 போ் புதுச்சேரிக்கு வந்தனா்.
இவா்கள், புதுவையில் நீா்வள ஆதாரங்கள் மற்றும் நீா் வளத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, மாநில அரசின் தலைமைச் செயலா்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நாடாளுமன்ற குழுவினா் சந்தித்துப் பேசினா்.
அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் (செய்தி மற்றும் விளம்பரம்) ஆா்.கேசவன் ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக, புதுவை சட்டப்பேரவை வளாகம், அரவிந்தா் ஆசிரமம், கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட இடங்களை நாடாளுமன்றக் குழுவினா் பாா்வையிட்டனா்.