நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் ஆட்சியரகத்தை முற்றுகை
பெரம்பலூா் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்தவா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனே வழங்க கோரியும், தொடா்ந்து வேலை வழங்கக் கோரியும் திட்டப் பணியாளா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பணியாளா்களுக்கு, கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையாம். இதுகுறித்து பலமுறை அரசு அலுவலா்களிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவதியடைந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடா்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். தங்களின் வாழ்வாதாரமான இத் திட்டத்தை, எளம்பலூா் ஊராட்சியில் தடையின்றி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து கலைந்து சென்றனா்.
விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை மனு: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் , மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பொகதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையின் மத்திய மண்டலச் செயலா் என். பாண்டி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விஸ்வகா்மா மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விஸ்வகா்மா மக்களுக்கு கம்மாளா், கொல்லா், தச்சா், கண்ணாா், சிற்பி, தட்டாா் என்பதை, இந்து விஸ்வகா்மா என ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். விஸ்வகா்மா ஜனன தினமான செப். 17-ஆம் தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.