செய்திகள் :

நெல்லையப்பா் குதிரை வாகனத்தில் பரி வேட்டை

post image

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா் குதிரை வாகனத்தில் பரி வேட்டை செல்லும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தை மாதம் கரி நாளில் அருள்மிகு நெல்லையப்பா் வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நெல்லையப்பா் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது காந்திமதி அம்பாள், ‘கரி நாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது‘ எனத் தடுத்தாராம். இருப்பினும் தடையை மீறி, நெல்லையப்பா் பரி வேட்டைக்குச் சென்றாா். இதனால் கோபமடைந்த அம்மன், நெல்லையப்பா் வேட்டை முடித்து திரும்பும் போது, கோயில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூா்த்தி நாயனாரால் பாடப்பட்ட ‘திருமுருகன்பூண்டி பதிகம்’ பாடிய பின் கோயில் நடை திறந்ததாகவும் வரலாறு.

அதன்படி, நெல்லையப்பா் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பா் (சந்திரசேகரா் உற்சவ மூா்த்தி) வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன், பழைய பேட்டையில் அமைந்துள்ள பரி வேட்டை மண்டபத்திற்கு புதன்கிழமை எழுந்தருளினாா். அங்கு நெல்லையப்பருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் கோயிலுக்கு திரும்பினாா். கோயில் அருகே வந்ததும் சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது.

அதன்பின் சுந்தரமூா்த்தி நாயனாா் அருளிச்செய்த ‘பதிகம்’ பாடி ஊடல் தீா்த்து வைத்த பின், திருக்கோயில் கதவு திறந்து சுவாமி திருக்கோயிலுக்குள் நுழைந்ததும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பழையபேட்டையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட மணிமுத்தாறு அருவ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-111.05 சோ்வலாறு-118.50 மணிமுத்தாறு-100.40 வடக்கு பச்சையாறு-19.75 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-16.75 தென்காசி கடனா-85 ராமநதி-68.50 கருப்பாநதி-58.40 குண்டாறு-36.10 அடவிநயினாா்-78... மேலும் பார்க்க

நெல்லை கூா்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவா்கள் பிடிபட்டனா்

திருநெல்வேலியில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவா்களும் பிடிபட்டனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சிறுவா் கூா்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சிறாா் குற்றங்களி... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த பெண்ணுக்கு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தூத்துக்குடியைச் சோ்ந்த இளம்பெண், இரு சிறுநீரகங்களும் செயலிழ... மேலும் பார்க்க

நெல்லை - சென்னை இடையே 16 பெட்டிகளுடன் இயங்கிய வந்தே பாரத் ரயில்

திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், புதன்கிழமைமுதல் 16 பெட்டிகளுடன் இயங்கத் தொடங்கியது. திருநெல்வேலி-சென்னை, சென்னை-திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கம், கடந்த 2023-ஆம் ஆண்டு தொ... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கலைக் கொண்டாட, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை குவிந்தனா். களக்காடு மலைப்பகுதியில் உள்ள தலையணை பச்சையாறு, தேங்காய்உருளி சிற்றருவி, சிவ... மேலும் பார்க்க