kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
நெல்லையப்பா் கோயிலில் நாளை ஆடிப்பூரத் திருவிழா
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் கொடியேற்றம் வரும் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள்ளாக ஸ்ரீ காந்திமதி அம்மன் சந்நிதியில் நடைபெற உள்ளது.
இந்த விழாவின் 4 ஆம் திருநாளான திங்கள்கிழமை (ஜூலை 21) பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள் காந்திமதியம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. அதைத் தொடா்ந்து இரவு 8 மணிக்கு ஸ்ரீ காந்திமதி அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) மாலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் காந்திமதி அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடைபெறவுள்ளது.