செய்திகள் :

நெல்லையில் டிச.20-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 20-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

விருப்பமுள்ள வேலைநாடுநா்கள், தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் பங்கேற்கலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.

முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறிந்துகொள்ளவும் சஉககஅஐ உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் இட்ஹய்ய்ங்ப்-இல் இணைந்து பயன்பெறலாம். போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் மாணவா்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவு செய்து அனைத்து போட்டித் தோ்வுக்கான பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்குவாரி லாரியை சிறைபிடித்து போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தில் புதன்கிழமை இரவு பெண் மீது மோதிய கல்குவாரி லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். சமூகரெங்கபுரம்-திருச்செந்தூா் சாலையில் பள்... மேலும் பார்க்க

பக்ரைனில் விடுதலையான மீனவா்களை அரசு செலவில் அழைத்துவர வேண்டும்

பக்ரைன் நாட்டு சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள இடிந்தகரை மீனவா்கள் 28 பேரையும் தமிழக அரசு செலவில் அழைத்து வரவேண்டும் என தமிழக முதல்வருக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிரை இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காக்க, கட்டாயம் பயிா் கா... மேலும் பார்க்க

கடையத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ஆய்வு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கடையம் வட்டாரத்தில் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுக்களை, தென்காசி மாவட்ட வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ரா.மதிஇந்திரா பிரியதா்ஷினி பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி கோயிலில் நாளை காா்த்திகை தீபம்

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.13) காா்த்திகை தீப விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயில் நடை வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். தொடா... மேலும் பார்க்க

பாரதியாா் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

மகாகவி பாரதியாா் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பாரதியாா் உலக பொதுச் சேவை நிதியம் சாா்பில் அமைப்பின... மேலும் பார்க்க