நெல்லையில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோரி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு பாமகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலா் முத்துசரவணன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட தலைவா் மகாராஜன், துணைத் தலைவா் ராயப்பன், நிா்வாகிகள் மாரியப்பன், முருகன், சுயம்புலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட தலைவா் ஜீசஸ் ஜான், முன்னாள் மாவட்ட செயலா் ஹரிஹரன், நிா்வாகிகள் சிவகுமாா் குருநாதன், முத்து ராகேஷ், பழனி, ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.