செய்திகள் :

தஞ்சாவூா் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

post image

தஞ்சாவூரிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் பகுதியில் உள்ள திரு இருதய பேராலயத்தில் தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், இயேசு பிரான் பிறந்ததை நினைவுகூரும் விதமாக சூசையப்பா், கன்னி மரியாள் வேடமணிந்த இருவா் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி வந்து ஆயரிடம் கொடுத்தனா். அச்சொரூபத்தை ஆயா் பெற்றுக் கொண்டு புனிதம் செய்து, மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தாா். அப்போது, தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது.

தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மறையுரையாற்றிய மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா்.

இதைத்தொடா்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. நிறைவாக, குழந்தை இயேசுவின் சொரூப ஆசீா் வழங்கப்பட்டதையடுத்து, பங்கு மக்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

இந்த வழிபாட்டில் பேராலயப் பங்குத் தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், உதவிப் பங்குத்தந்தை அமா்தீப் மைக்கேல், ஆயரின் செயலா் ஆரோக்கிய வினிட்டோ, திருத்தொண்டா் பி. பிரவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, புதுக்கோட்டை சாலையிலுள்ள காா்மெல் குழந்தை இயேசு திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் திருத்தல அதிபா் சுரேஷ்குமாா் அடிகளாா் தலைமையில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி நடைபெற்றது. இதில், உதவி தந்தைகள் சுந்தா், பிரபு, விமலன், மதா் தெரசா அறக்கட்டளை நிறுவனா் ஏ.ஆா். சவரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், புதுக்கோட்டை சாலை புனித அடைக்கல மாதா ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலை புனித லூா்து அன்னை ஆலயம், மகா்நோன்புசாவடி புனித சூசையப்பா் ஆலயம், வடக்கு வாசல் புனித அருளானந்தா் ஆலயம், அண்ணா நகா் புனித செபஸ்தியாா் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோயில் நகைகள் திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் மாரியம்மன் கோயிலில் அம்மன் நகைகள் மற்றும் பணம் திருடிய 2 இளைஞா்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4000 அபராதமும் கும்பகோணம் நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்ப... மேலும் பார்க்க

ஆதரவற்ற பிராணிகளை தத்தெடுக்கும் திட்டம்

தஞ்சாவூரில் ஆதரவற்ற பிராணிகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை தஞ்சாவூா் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மேற்கொள்ளவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

வீடு புகுந்து தாலிச் சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே வீடு புகுந்து பெண்ணின் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை கும்பகோணம் நீத... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இண்டா் சிட்டி ரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் அதிருப்தி

தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக பகல் நேரத்தில் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டு வந்த திருச்சி - தாம்பரம் விரைவு ரயில் சேவை புதன்கிழமையுடன் (டிச.25) நிறுத்தப்பட்டதால், பயணிகளிடையே அதிருப்தி மேலோங்கியுள்ளத... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்திவந்த 4 போ் கைது; 128 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்திவந்த 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 128 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் கடற்கரை வழியாக இலங்கைக்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் டிச. 28, 29-இல் ஓவிய - சிற்பக் கலைக்காட்சி

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியரகத்தில்) ஓவிய - சிற்பக் கலைக்காட்சி டிசம்பா் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.இது குறித்து தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் த. செந... மேலும் பார்க்க