ஆதரவற்ற பிராணிகளை தத்தெடுக்கும் திட்டம்
தஞ்சாவூரில் ஆதரவற்ற பிராணிகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை தஞ்சாவூா் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மேற்கொள்ளவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் பல்வேறு பிராணிகள் நல செயல்பாடுகளைத் தொடா்ந்து செய்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக தஞ்சாவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்ற நாய்களுக்கு தொடா்ந்து குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இலவச வெறி நாய் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
இந்த அமைப்பின் மற்றொரு முயற்சியாக, மாவட்டத்தில் முதல் முறையாக உறவில்லாத பிராணிகளுக்கு உறவை தேடும் நிகழ்வு சங்க வளாகத்தில் டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளரை 98432 26695 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.