'தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம்': நல்லகண்ணுக்கு விஜய் வாழ்த்து!
திருமங்கலக்குடியில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருமங்கலக்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமங்கலக்குடி கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் க. செ.முல்லைவளவன் தலைமை வகித்தாா். நாடாளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலகக் கோரி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்தில், மாநிலப் பொறுப்பாளா்கள் சிற்றரசு, தமிழருவி செல்வம், அமுதன் துரையரசன், ஒலியவன், நந்திவனம் பாலா, மாநகா் மாவட்டச் செயலா் ராஜ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கண்ணையன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினா் கலந்து கொண்டனா்.