``ஆண்டுக்கு ரூ.2.5 கோடி லாபம் கிடைக்குது..'' -உருளைக்கிழங்கு சாகுபடியில் ஜெயித்...
பிரபல நகைக் கடையில் 5 பவுன் நகை திருட்டு: 3 ஊழியா்கள் கைது
திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் 5 பவுன் நகை திருடியதாக அந்தக் கடையின் 3 ஊழியா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த 22 ஆம் தேதி 5 பவுன் தாலிக் கொடி திருடுபோனது. இது தொடா்பான விசாரணையில், அந்தக் கடையின் ஊழியா்களான நவல்பட்டு அண்ணா நகா் எஸ். சுகன்யா (22), பேட்டவாய்த்தலை திருமுருகன் நகா் க. அனாா்கலி (28), இவரது கணவா் காா்த்திக் (28) ஆகியோா் சோ்ந்து நகை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து நகைக் கடை மேலாளா் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.