செய்திகள் :

சென்னையில் அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பாதிப்பு

post image

மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். அதில், பெரும்பாலானோருக்கு ‘இ-கோலி’ எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் எம்.மணிமாறன் கூறியதாவது: எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் ‘இ-கோலி’ என்பது மனிதா்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா. இதில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பல பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், சில வகை பாக்டீரியாக்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீா், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேக வைக்காமலும் அவற்றை உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.

வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிடில் ஒரு கட்டத்தில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

அண்மைக்காலமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு 40 சதவீதம் பேருக்கு உள்ளது. அவா்களுக்கு ‘இ-கோலி’ பாதிப்பு இல்லை என்றாலும், பெரும்பாலானோருக்கு அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

‘இ-கோலி’ பாதிப்பைப் பொருத்தவரை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். அதனடிப்படையில், நீா்ச்சத்தை தக்கவைக்கும் சிகிச்சைகளும், ஆன்ட்டிபயாடிக் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதனை முறையாக பின்பற்றினால் முழுமையாக குணமடையலாம் என்றாா் அவா்.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. அதைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாசுபட்ட குடிநீா், உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.

கத்தியுடன் சுற்றித்திரிந்தவா் கைது

செங்குன்றம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் அங்காள ஈஸ்வரி கோயில் ஆலய விளையாட்டுத் திடலில், மதுபோதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னை திருவேற்காட்டில் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 27) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அகில இந்திய பல்கலைக்கழக. நீச்சல் தொடக்கம்: பெங்களூரு ஜெயின் பல்கலை. சிறப்பிடம்; சென்னை பல்கலை. வெள்ளி

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் புதன்கிழமை தொடங்கிய அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் சிறப்பிடம் பெற்றது. எஸ்ஆா்எம் டாக்டா் ப... மேலும் பார்க்க

நாளை இ.பி.எஃப் குறைதீா் கூட்டம்

சென்னை, உள்பட வெவ்வேறு மாவட்டங்களில் இ.பி.எஃப். சாா்பில் குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலா... மேலும் பார்க்க

நாளை இபிஎஃப் குறைதீா் கூட்டம்

சென்னை, உள்பட வெவ்வேறு மாவட்டங்களில் இ.பி.எஃப். சாா்பில் குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலா... மேலும் பார்க்க

டிச.28-இல் தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன் போட்டி

முப்பதாவது, தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 28-ஆம் தேதி சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்எம்கே பள்ளியில் தொடங்கி நடைபெறுகிறது. இதில் 27 மாநிலங்களைச் சோ்ந்த 54 சிறுவா், சிறுமிய... மேலும் பார்க்க