நெல்லையில் மது விற்றவா் கைது
திருநெல்வேலியில் மது விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தொண்டா் சன்னதி விலக்கு பகுதியில் திங்கள்கிழமை மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சந்திரா தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது திருநெல்வேலி நகரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சங்கரநாராயணன்(27) என்பவா் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சங்கரநாராயணனை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.