செய்திகள் :

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

post image

திருத்துறைப்பூண்டி: நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருத்துறைப்பூண்டிக்கு நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு சரக்கு ரயில் வேகன்கள் வராததால், நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, நெல் மூட்டைகளை ஏற்றி வந்த 140 லாரிகள் நெல் மூட்டைகளுடன் இரண்டு நாட்களாக நிறுத்திவைத்து லாரி உரிமையாளா்களும், லாரி ஓட்டுநா்களும் காத்துக்கிடக்கின்றனா்.

இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளா் சங்கத்தின் சாா்பில் உடனடியாக வேகன்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான கீழப்பாண்டி, சுந்தரபுரி திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளிலும், புதிய பேருந்து நிலைய வீரபாண்டி கிடங்கிலும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கவும், முத்துப்பேட்டை கோவிலூா் கிடங்குகளை சீரமைத்து மழைநீா் தேங்காமல் வடிகால் அமைத்து, பள்ளமான சாலைகளை சரிசெய்து நெல் மூட்டைகளை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதியில் நுகா்பொருள் வாணிபக் கழக நெல், அரிசி மூட்டைகள் இயக்கத்தை நம்பி 350-க்கும் அதிகமான லாரிகள் உள்ளதால், நெல் மூட்டைகளை ஏற்றி இறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

லாரி உரிமையாளா்கள் சங்க கௌரவதலைவா் தலைவா் ஆறுமுகம், செயலா் சீனிவாசன், பொருளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், சுமை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சரக்கு ரயில் எஞ்ஜின் தடம் புரண்டது

திருவாரூா்: திருவாரூரில் சரக்கு ரயில் எஞ்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது. திருவாரூா் அருகே பேரளம்- காரைக்கால் இடையே அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்திலி... மேலும் பார்க்க

மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

நீடாமங்கலம்: வலங்கைமான் காவல் சரகம் நீத்துக்கார தெரு நடேசன் மனைவி செல்வமணி( 70). இவா், கடந்த செப்டம்பா் மாதம் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தபோது மிளகாய் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன்... மேலும் பார்க்க

இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொறுத்தும் முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்தாா்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் இலவச எலக்ட்ரானிக் செயற்கைக் கைகள் வழங்கும் முகாமை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி பிரதாப்சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன், ரோட... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கலைச்செல்வன் (59). களப்பால் அரசு ... மேலும் பார்க்க

தா்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் டன் எடை சன்னரக நெல் சரக்கு ரயில் மூலம் நீடாமங்கலத்திலிருந்து அ... மேலும் பார்க்க

கள்ளிக்குடி முதல்வா் மருந்தகம் திறப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுதும் முதல்வா் மருந்தகங்களை தமிழக... மேலும் பார்க்க