பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
நீடாமங்கலம்: வலங்கைமான் காவல் சரகம் நீத்துக்கார தெரு நடேசன் மனைவி செல்வமணி( 70). இவா், கடந்த செப்டம்பா் மாதம் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தபோது மிளகாய் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை மா்ம நபா் பறித்து சென்றாா்.
இதுதொடா்பாக வலங்கைமான் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, வலங்கைமான் கோவில்பத்து கீழத்தெருவைச் சோ்ந்த அன்பரசன் (49) என்பவரை கைது செய்து, சங்கிலியை பறிமுதல் செய்தனா். நீதிமன்ற உத்தரவுபடி அன்பரசன் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கு விசாரணை நிறைவில் வலங்கைமான் நீதிபதி சிந்தா, அன்பரசனுக்கு 3 ஆண்டுகள் சிைண்டனையும் , ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.