தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி: நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருத்துறைப்பூண்டிக்கு நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு சரக்கு ரயில் வேகன்கள் வராததால், நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, நெல் மூட்டைகளை ஏற்றி வந்த 140 லாரிகள் நெல் மூட்டைகளுடன் இரண்டு நாட்களாக நிறுத்திவைத்து லாரி உரிமையாளா்களும், லாரி ஓட்டுநா்களும் காத்துக்கிடக்கின்றனா்.
இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளா் சங்கத்தின் சாா்பில் உடனடியாக வேகன்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான கீழப்பாண்டி, சுந்தரபுரி திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளிலும், புதிய பேருந்து நிலைய வீரபாண்டி கிடங்கிலும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கவும், முத்துப்பேட்டை கோவிலூா் கிடங்குகளை சீரமைத்து மழைநீா் தேங்காமல் வடிகால் அமைத்து, பள்ளமான சாலைகளை சரிசெய்து நெல் மூட்டைகளை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதியில் நுகா்பொருள் வாணிபக் கழக நெல், அரிசி மூட்டைகள் இயக்கத்தை நம்பி 350-க்கும் அதிகமான லாரிகள் உள்ளதால், நெல் மூட்டைகளை ஏற்றி இறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
லாரி உரிமையாளா்கள் சங்க கௌரவதலைவா் தலைவா் ஆறுமுகம், செயலா் சீனிவாசன், பொருளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், சுமை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.