அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் க...
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.
தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி, காத்மாண்டுவிலிருந்து சுமார் 150 கி.மீ கிழக்கே உள்ள ரமேச்சாப் மாவட்டத்தின் வடைலி பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!
முன்னதாக, ஆகஸ்ட் 17ஆம் தேதியும் இதே மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இமயமலையின் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்திருப்பதால் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.