TVK: "ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர், நிர்மல் இ.பொதுச் செயலாளர்" - புதிய நிர்வா...
நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!
நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாள அணிகள் தங்களுக்குள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இந்த டி20 தொடரானது ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, அணியில் 5 அறிமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முக்கிய வீரர்களான சாய் ஹோப், அல்சாரி ஜோசப், மற்றும் ஜான்சன் கார்ல்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட அணியை சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். அறிமுக வீரர்களாக பேட்டர் அக்கீம் அகஸ்டி, ஆல்ரவுண்டர் நவின் பிடாய்சி, சுழற்பந்துவீச்சாளர் ஸீஷன் மொட்டாரா, வேகப் பந்துவீச்சாளர் ரமோன் சிம்மண்ட்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் அமீர் ஜாங்கோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்
அகீல் ஹொசைன் (கேப்டன்), ஃபாபியன் ஆலன், ஜுவல் ஆண்ட்ரூ, அக்கீம் அகஸ்டி, நவின் பிடாய்சி, ஜெடியா பிளேட்ஸ், கீஸி கார்ட்டி, கரீமா கோர், ஜேசன் ஹோல்டர், அமீர் ஜாங்கோ, கைல் மேயர்ஸ், ஒபெட் மெக்காய், ஸீஷன் மொட்டாரா, ரமோன் சிம்மண்ட்ஸ், ஷமர் ஸ்பிரிங்கர்.
டி20 தொடர் அட்டவணை
முதல் டி20: செப்டம்பர் 27, ஷார்ஜா
இரண்டாவது டி20: செப்டம்பர் 29, ஷார்ஜா
மூன்றாவது டி20: செப்டம்பர் 30, ஷார்ஜா
The West Indies Cricket Board has announced the squad for the T20 series against Nepal.
இதையும் படிக்க: ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்