நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!
நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நேபாளத்தின் தாங் மாவட்டத்தின் சிஸாபானி பகுதியில் திடீரென அந்தப் பேருந்தின் பிரேக்குகள் பழுதானதினால் அங்கிருந்த சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் படுகாயமடைந்த 21 இந்தியர்களை நேபாள காவல் துறையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், அதிர்ஷடவசமாக இந்த விபத்தில் பயணிகளின் உயிருக்கு பெரியளவிலான அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை எனவும் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநரைக் கைது செய்த அந்நாட்டு காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓட்டுநரைத் தவிர காயமடைந்த அனைத்து பயணிகளும் முதலுதவி பெற்ற பின்னர் இந்தியாவுக்கு திரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் பாதிப்படையும் இந்தியா?