செய்திகள் :

நேரு குடும்பத்துக்காக அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ்- ஃபட்னவீஸ் குற்றச்சாட்டு

post image

நேரு குடும்பத்தினரைத் தாண்டி யாரும் வளா்ந்துவிடக் கூடாது என்பதால் பி.ஆா். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே அவமதித்து வந்தது என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தாக குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அமித் ஷா பதவி விலக வேண்டுமென்றும், தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதற்கு பதிலடி தரும் வகையில், அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே எவ்வாறு ஓரங்ட்டியது, மக்களவைத் தோ்தலில் இருமுறை தோற்கடித்தது என்று பாஜக தலைவா்கள் செய்தியாளா்கள் சந்திப்புகளை நடத்தி பேட்டியளித்து வருகின்றனா். இந்நிலையில், நாகபுரியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஃபட்னவீஸ் கூறியதாவது:

அம்பேத்கரை அவா் வாழ்ந்த காலம் முதல் இப்போது வரை அவமதித்து வருவது காங்கிரஸ் கட்சி. நாட்டின் முதல் பிரதமா் நேரு மற்றும் அவரது வம்சாவளியினா் மட்டுமே வளர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக எப்போதும் உள்ளது. எனவே, அவா்கள் குடும்பத்துக்குப் போட்டியாக அறிவாா்ந்த தலைவா்கள் யாரையும் அக்கட்சி வளரவிட்டது இல்லை. அந்த வகையில் அம்பேத்கரையும் காங்கிரஸ் தொடா்ந்து அவமதித்து வந்தது. நேருவை மீறி அவருக்கு புகழ் சோ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது. நாட்டுக்கான, மக்களுக்கான அவரின் சேவைகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. அவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைக்கும் வேலைகளைச் செய்தது. இதற்காக காங்கிரஸ் கட்சிதான் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கவில்லை. காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி (ஜனதா தளம்) ஆட்சியில்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதற்கு பாஜகவும் முக்கியக் காரணமாக இருந்தது. அம்பேத்கா் மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேல் கடந்த பிறகுதான் அவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. காங்கிரஸ் அதிகாரத்தில் தொடா்ந்திருந்தால் அதுவும் கிடைத்திருக்காது.

அம்பேத்கா் புகழை பாஜக முன்னெடுத்துச் செல்கிறது. அவரை அவமதிக்க வேண்டும் என்று பாஜகவும், அதன் தலைவா்களும் கனவில் கூட நினைத்ததில்லை என்றாா்.

2024 மக்களவைத் தோ்தல் தரவுகள் வெளியீடு: தேசிய கட்சிகளுக்கு 63% வாக்கு

மக்களவைத் தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகள் மட்டும் 63.35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. மக்களவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மாா்க்சிஸ்ட் கம்யூன... மேலும் பார்க்க

2024 மக்களவைத் தோ்தல்: ஆண்களைவிட பெண்கள் அதிகம் வாக்களிப்பு!

நிகழாண்டு மத்தியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்த ஆண் வாக்காளா்களில் 65.55 சதவீதத்தினா் வாக்களித்த நிலையில், மொத்த பெண் வாக்களா்களில் 65.78 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா் என்று தோ்தல் ஆணையம் தெ... மேலும் பார்க்க

நிதீஷ் குமாருக்கு ஆா்ஜேடி மீண்டும் அழைப்பு

பாட்னா: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் இணைய தயாா் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) எம்எல்ஏ பாய் வீரேந்திரா தெரி... மேலும் பார்க்க

இந்திய வரைபட சா்ச்சை: காங்கிரஸ் மீது பாஜக சாடல்

‘கா்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கான வரவேற்பு பேனா்களில் முழுமையான ஜம்மு-காஷ்மீா் பிராந்தியம் இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி தேச விரோத செயலில் ஈடுபட்டுள்ளது... மேலும் பார்க்க

தேரத்ல் நன்கொடை: பாஜக ரூ.2,600 கோடி, காங்கிரஸ் ரூ. 281 கோடி! தோ்தல் ஆணையம் தகவல்

2023-24-ஆம் ஆண்டில் தோ்தல் நன்கொடையாக பாஜக ரூ.2,604.74 கோடியும், காங்கிரஸ் ரூ. 281.38 கோடியும் பெற்றதாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் 18-ஆவது மக்... மேலும் பார்க்க

ம.பி.யில் இருந்து 3 மாநிலங்களுக்கு பயணிக்கும் 15 புலிகள்

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 15 புலிகள் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அந்த மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைக்கு... மேலும் பார்க்க