செய்திகள் :

நேற்றைய சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

post image

மும்பை: நேர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில், இன்றைய பங்குச் சந்தைகள் உறுதியான குறிப்பில் தொடங்கி, முன்னேறியதால் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில், இரண்டாவது பாதியில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் சந்தையின் உயர்வை சற்று கட்டுப்படுத்தியது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 422.62 புள்ளிகள் உயர்ந்து 78,387.61 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 160.2 புள்ளிகள் உயர்ந்து 23,776.25 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில், வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 234.12 புள்ளிகள் உயர்ந்து 78,199.11 ஆகவும், நிஃப்டி 91.85 புள்ளிகள் உயர்ந்து 23,707.90 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

நிஃப்டியில் ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ட்ரெண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் முடிந்தது.

துறைகளைப் பொறுத்தவரை, ஐடி துறையைத் தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தது. எண்ணெய் & எரிவாயு, ரியால்டி, எனர்ஜி, வங்கி, உலோகம் மற்றும் பார்மா 0.5 முதல் 1 சதவிகிதம் வரை உயர்ந்தது முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் குறியீடு 0.7 சதவிகிதமும், ஸ்மால்கேப் பங்குகள் 1.7 சதவிகிதமும் உயர்ந்தன.

ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், பிடிசி இண்டஸ்ட்ரீஸ், ஆம்பர் எண்டர்பிரைசஸ், அபார் இண்டஸ்ட்ரீஸ், பர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ், கிம்ஸ், லாரஸ் லேப்ஸ், அபோட் இந்தியா, ஐடிஐ உள்ளிட்ட 130 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

மறுபுறம், சனோஃபி இந்தியா, பிவிஆர் ஐநாக்ஸ், கஜாரியா செராமிக்ஸ், கன்டெய்னர் கார்ப்பரேஷன், மதர்சன் சுமி வயரிங் இந்தியா, மஹிந்திரா லைஃப், நெட்வொர்க் 18, யெஸ் வங்கி, ரிலாக்ஸோ ஃபுட்வியர், அலோக் இண்டஸ்ட்ரீஸ், என்எம்டிசி ஸ்டீல் உள்ளிட்ட 100 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார சரிவை பதிவு செய்தது.

ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ உயர்ந்தும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) அன்று ரூ.2,575.06 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.14 சதவிகிதம் சரிந்து 76.19 அமெரிக்க டாலராக உள்ளது.

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.இந்த வாரம் தொடங்கியதில் இருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை புதன்கிழமை காலை ரூ. 80 அதிகரித்... மேலும் பார்க்க

விதிமுறைகளை மீறியதாக ஓலா எலெக்ட்ரிக் மீது செபி நோட்டீஸ்!

புதுதில்லி: மின்சார வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் வெளிப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் இருந்து நிர்வாக எச்சரிக்கையைப் பெற்றுள்ளது.ஓலா எலக்ட்ரிக்... மேலும் பார்க்க

ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.87-ஆக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க நாணயம் ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 13 காசு சரிந்து, வரலாறு காணாத வகையில் ரூ.85.87 ஆக முடிந்தது.இன்றைய வர... மேலும் பார்க்க

காளையின் ஆதிகத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!

மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தைப் போக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேறுதல்களுக்கு மத்தியில் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் சரிவில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் கரடிகள் ஆதிக்கத்தால் ச... மேலும் பார்க்க

சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தை இன்று(ஜன. 8) கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,319.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.நண்பகல் 12.50 மணிக்கு சென்செக்ஸ் 636.50 புள்ளி... மேலும் பார்க்க

இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்!

இந்தியாவில் 300 கோடி டாலரை (ரூ. 2.5 ஆயிரம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சா... மேலும் பார்க்க