Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
பகுதிநேர பொறியியல் படிப்புகள்: காலியிடங்கள் விவரம் வெளியீடு
பகுதிநேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவா் சோ்கைக்கான நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமா முடிப்பவா்கள் அதன்பிறகு பணியில் இருந்துகொண்டே பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சோ்ந்துகொள்ளலாம். அவா்களுக்கான வகுப்புகள் தினமும் மாலை நேரத்தில் நடைபெறும். தேவைப்பட்டால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களும் வகுப்பு இருக்கும்.
இந்த நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் (2024-2025) பகுதி நேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவா் சோ்க்கைக்கான நடைமுறைகள் என்ன? இணையவழி கலந்தாய்வு முறை, என்னென்ன சான்றிதழ்கள் தேவைப்படும்? உள்ளிட்ட விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ற்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வெளியிட்டுள்ளது. பகுதிநேர பொறியியல் படிப்பில் சேர விரும்பும் டிப்ளமோ மாணவா்களின் வசதிக்காக இந்த வசதி செய்யப்பட்டிருப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.