செய்திகள் :

பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஆழித்தேர்: திரளானோர் பங்கேற்பு!

post image

திருவாரூரில் தியாகராஜ சுவாமிகள் கோயிலின் ஆழித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாகத் தொடங்கியது. நான்கு வீதிகளிலும் பவனிவந்த ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்டத்தைக் காண திருஞான சம்பந்தரும், நாவுக்கரசரும் இங்கு வந்து தங்கியிருந்ததாக உள்ள குறிப்புகளின் மூலம் 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே திருவாரூரில் தேர்த்திருவிழா நடைபெற்றது என்பதை அறிய முடிகிறது. இந்த ஆழித்தேரோட்டத்தில் தனது பரிவாரங்களுடன் தியாகராஜ சுவாமி எழுந்தருளி பவனி வருவதை காண இந்திரன் முதலானோர் வருவதாக ஐதீகம்.

நிகழாண்டுக்கான ஆழித்தேர் திருவிழா இன்று தொடங்கியது. பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் ஆருரா, தியாகேசா என்ற பக்தி கோஷங்கள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழத்தனர். மிக பிரம்மாண்ட ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனுடன் அம்பாள் சண்டிகேசுவரர் தேரும் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக காலை 5.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

ஆழித்தேரோட்டத்துக்கு 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் குரலில் ‘ரெட்ட தல’ பாடல்!

நடிகர் அருண் விஜய் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வணங்கான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.தொடர்ந்து, அ... மேலும் பார்க்க

கோலாகலமாக நடந்தேறிய தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்!

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தேறியது. பிரசித்தி பெற்ற பழமையான காசி விஸ்வநாதர் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடை... மேலும் பார்க்க

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா!

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் ... மேலும் பார்க்க

‘இந்த வரலாறு தொடர்கிறது...’ கிண்டலுக்கு ஆளான எஸ். வி. சேகர்!

நடிகர் எஸ். வி. சேகர் பதிவைப் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் திரைப்படம் கடந்த ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்... மேலும் பார்க்க