பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங...
பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சி!
பங்குச்சந்தை இன்று(நவ. 28) ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவை சந்தித்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை
80,281.64 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 1.07 மணி நிலவரப்படி, செக்செக்ஸ் 961.73 புள்ளிகள் குறைந்து 79,272.34 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 281.90 புள்ளிகள் சரிந்து 23,993.00 புள்ளிகளில் உள்ளது.
இதையும் படிக்க | ஸ்டாப்! ஸ்டாப்! பிரியங்காவை நிறுத்தி புகைப்படம் எடுத்த ராகுல்!! (விடியோ)
நிஃப்டி50 பங்குகளில் இன்ஃபோசிஸ், எம்&எம், டெக் மஹிந்திரா, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தது.
அதானி எண்டர்பிரைசஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனங்கள், எஸ்பிஐ லைஃப், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபத்தில் முன்னணியில் உள்ளன.
அதானி நிறுவன பங்குகள் விலை கடந்த செவ்வாய்கிழமை குறைந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஏற்றம் கண்டு வருகின்றன.