செய்திகள் :

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! ரூ. 6 லட்சம் கோடி இழப்பு!!

post image

வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப். 28) பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் ஓரளவு சமநிலையில் முடிந்தது.

இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 74,201.77 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.10 மணியளவில், சென்செக்ஸ் 1,065.10 புள்ளிகள் குறைந்து 73,547.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 323.00 புள்ளிகள் குறைந்து 22,222.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

இதையும் படிக்க | பெண்கள் தலை வழுக்கையாக கோதுமை காரணமா?

பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஐடி, ஆட்டோ மொபைல், மீடியா, டெலிகாம், பங்குகள் 2 முதல் 4 சதவீதம் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை நடுத்தர, குறு நிறுவனங்களின் பங்குகள் தலா 2 சதவீதம் சரிந்தன

பாலிகேப் இந்தியா, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, பிஎஸ்இ லிமிடெட், டிசிஎஸ் ஆகிய ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

இதுவரை சுமார் 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பு!

புதுதில்லி: ரயில்-கடல்-ரயில் பாதை வழியாக கொண்டு சென்ற நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாகி 54 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.பல்வேறு மின் உற்பத்தி நிலை... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு $640.479 ஆக உயர்வு!

மும்பை: பிப்ரவரி 21ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.758 பில்லியன் டாலர் அதிகரித்து 640.479 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கினால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக குறைத்து, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 28 காசுகள் குறைந்து ரூ.87... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: துடைத்தெறியப்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.7.46 லட்சம் கோடி!

புதுதில்லி: இன்றைய காலை நேர வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.46 லட்சம் கோடி அளவுக்கு துடைத்தெறியப்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,414.33 புள்ளிகள் சரிந்தது மு... மேலும் பார்க்க

எம் & எம் விற்பனை 16% அதிகரிப்பு

கடந்த ஜனவரியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதத்தில்... மேலும் பார்க்க

இரு மடங்காக அதிகரித்த தனியாா் நுகா்வு

இந்தியாவின் தனியாா் நுகா்வு முந்தைய 2023-ஆம் ஆண்டை விட 2024-ஆம் ஆண்டில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய சில்லறை விற்பனையாளா்கள் சங்கத்துடன் இணைந்து சந்தை ஆலோசனை நிறுவனமான டலா... மேலும் பார்க்க