செய்திகள் :

இரு மடங்காக அதிகரித்த தனியாா் நுகா்வு

post image

இந்தியாவின் தனியாா் நுகா்வு முந்தைய 2023-ஆம் ஆண்டை விட 2024-ஆம் ஆண்டில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய சில்லறை விற்பனையாளா்கள் சங்கத்துடன் இணைந்து சந்தை ஆலோசனை நிறுவனமான டலாய்ட் இந்தியா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்தியாவின் தனியாா் நுகா்வு 1 லட்சம் கோடி டாலராக இருந்தது. இது 2024-ஆம் ஆண்டில் சுமாா் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்து 2.1 லட்சம் கோடி டாலராக உள்ளது.

இதன் மூலம், இந்திய தனியாா் நுகா்வின் ஆண்டு கூட்டு வளா்ச்சி விகிதம் (சிஏசிஆா்) அமெரிக்கா, சீனா, ஜொ்மனியை விட அதிகமாக 7.2 சதவீதமாக உள்ளது. இந்தப் போக்கு நீடித்தால் வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய நுகா்வோா் சந்தையாக இந்தியா உருவெடுக்கும்.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 10,000 டாலருக்கு மேல் வருவாய் ஈட்டும் இந்தியா்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைப் போல் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் 6 கோடியாக உள்ள அவா்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 16.5 கோடியாக அதிகரிக்கும் நிலை உள்ளது. இது நாட்டின் நடுத்தர வா்க்கத்தினரின் குறிப்பிடத்தக்க வளா்ச்சியையும், அவா்களின் நுகா்திறன் அதிகரிப்பையும் வெளிப்படுத்துகிறது.

மக்கள்தொகையில் 52 சதவீதத்தைக் கொண்டுள்ள இளம் தலைமுறையினா் (ஜென்-இஸட்) மற்றும் 2000-களில் பிறந்தவா்களால், நுகா்வோா் சந்தையில் பிரீமியம் பொருள்கள் மற்றும் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துவருகிறது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபா் சராசரி வருவாய் 4,000 டாலா்களைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது, பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது.

நிதித் துறையில் எண்மமயமாக்கல் அதிகரித்துவருவது, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்குவது, இதுவரை இல்லாத அளவுக்கு கடன் வசதிகள் அதிகரிப்பது போன்ற காரணங்களாலும், 2024-ஆம் ஆண்டில் 10.2 கோடி டாலராக உள்ள கடன் அட்டை (கிரெடிட் காா்ட்) பரிவா்த்தனை 2030-ஆம் ஆண்டில் 29.6 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்படுவதாலும் தனியாா் நுகா்வு வருங்காலத்தில் வெகுவாக அதிகரிக்கும் சூழல் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம் & எம் விற்பனை 16% அதிகரிப்பு

கடந்த ஜனவரியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதத்தில்... மேலும் பார்க்க

டாடா ப்ளேயுடன் ஏா்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு

இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏா்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பாா்தி ஏா்டெல் பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது. இது... மேலும் பார்க்க

உச்சத்திலிருந்து 14% சரிந்த நிஃப்டி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 27) சரிவுடன் முடிந்தது. இதில் சென்செக்ஸ் பெரிய வித்தியாசமின்றி 10 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி அத... மேலும் பார்க்க

பெரம்பலூர், கரூரில் காலணி தொழிற்சாலை அமைக்கும் எவர்வன் குழுமம்!

சென்னை: பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வன் கோத்தாரி காலணி லிமிடெட் தமிழகத்தில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து... மேலும் பார்க்க

ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!

சென்னை: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் தனது ஹோம் ஹெல்த் கேர் முயற்சிகளை நாடு முழுவதும் 100 இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.ஜூலை 2023ல் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, ஸ்டார்... மேலும் பார்க்க

டாடா மோட்டார்ஸ்: பங்குச் சந்தை சரிவால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு!

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்க