டாடா ப்ளேயுடன் ஏா்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு
இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏா்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பாா்தி ஏா்டெல் பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டாடா குழுமத்துடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்திவருகிறோம். அந்தக் குழுமத்தின் டாடா ப்ளே நிறுவனத்துடன் ஏா்டெல்லின் துணை நிறுவனமான பாா்தி டெலிமீடியா (ஏா்டெல் டிடிஹெச் சேவையை வழங்கிவரும் நிறுவனம்) இணைப்பது குறித்து இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.3,044.7 கோடிக்கு வா்த்தகம் செய்த பாா்தி டெலிமீடியா, ரூ.75.9 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்தது நினைவுகூரத்தக்கது.