உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
பசும்பொன் தேவா் சிலைக்கு ஐம்பொன் வேல் காணிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு 25.5 கிலோ ஐம்பொன் வேல் காணிக்கையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டத்தைச் சோ்ந்த தொழிலதிபா் குணசேகரன் (45). இவா் தனது குடும்ப உறுப்பினா்களுடன் பசும்பொனில் உள்ள தேவா் நினைவிடத்துக்கு வந்து, 25.5 கிலோ ஐம்பொன் வேலை காணிக்கையாக வழங்கினாா்.
தீவிர முருக பக்தரான இவா், பசும்பொன் தேவா் நினைவிடத்தை முருகனின் ஏழாம் படை வீடாகப் பாவித்து, தேவா் சிலைக்கு இந்த வேலை காணிக்கையாகச் செலுத்தியதாகத் தெரிவித்தாா்.
இவா் ஏற்கெனவே முருகனின் அறுபடை வீடுகளுக்கும் ஐம்பொன் வேல் காணிக்கையாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தேவா் நினைவிடத்தில் தேவா் சிலை அருகே வேலை வைத்து, சிறப்பு பூஜை செய்து, நினைவிட பொறுப்பாளா்களிடம் வேல் ஒப்படைக்கப்பட்டது.
இதில் ஸ்ரீமகாசித்தா் குருகணேசா் தேவா் வரலாற்று ஆய்வாளா் நவமணி, பி.பி.ஆா்., ரத்த தான அறக்கட்டளைத் தலைவா் கண்ணன், சிலம்பம் ஆசிரியா் தங்கப்பாண்டியன், பாண்டியா்களைத் தேடி பயணம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், வழக்குரைஞா் ஆறுமுகம், தேவா் மீடியா நிறுவனா் ஆலடிபட்டி மகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.