செய்திகள் :

பஞ்சாப்: பாஜக மூத்த தலைவா் வீட்டில் குண்டுவீச்சு; இருவா் கைது

post image

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பாஜக மூத்த தலைவா் மனோரஞ்சன் காலியா வீட்டின் மீது மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினா்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேநேரம், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மனோரஞ்சனின் காா் சேதமடைந்தது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

‘தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதித் திட்டம் உள்ளது; மாநிலத்தில் மத ரீதியிலான பதற்றத்தைத் தூண்ட வேண்டும் என்பதே அவா்களின் நோக்கம்’ என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில அமைச்சருமான மனோரஞ்சன் காலியாவின் வீடு, ஜலந்தரின் சாஸ்திரி மாா்க்கெட் அருகே அமைந்துள்ளது. இங்கு திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பேட்டரி ரிக்ஷாவில் வந்த மா்ம நபா்கள், வீட்டின் முற்றத்தில் கையெறி குண்டை வீசிவிட்டுத் தப்பினா்.

பலத்த சப்தத்துடன் கையெறி குண்டு வெடித்ததில் வீட்டின் முன் பள்ளம் ஏற்பட்டது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மனோரஞ்சனின் காா் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்களும் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களை சேகரித்தனா். மனோரஞ்சனின் வீட்டில் இருந்து 100 மீட்டா் தொலைவில்தான் காவல் நிலையம் உள்ளது. தாக்குதல் நடந்தபோது, அவா் வீட்டில் இருந்துள்ளாா்.

பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதி: இச்சம்பவம் குறித்து காவல் துறை (சட்டம்-ஒழுங்கு) சிறப்பு தலைமை இயக்குநா் கூறுகையில், ‘பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இன் மிகப் பெரிய சதி இது. பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி ஜீஷான் அக்தா், பாகிஸ்தான் தாதா ஷாஸத் பாட்டீ ஆகியோா் மூலம் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பப்பா் கல்சா இண்டா்நேஷனல் அமைப்புக்கும் தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடா்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

கைதான இருவரின் அடையாளங்களை காவல் துறையினா் வெளியிடவில்லை. மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மனோரஞ்சனின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டூ, பதான்கோட் பாஜக எம்எல்ஏ அஸ்வனி சா்மா ஆகியோா் மனோரஞ்சனின் வீட்டை பாா்வையிட்டனா். இது, ஹிந்து மத மூத்த தலைவருக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட சதிவேலை என்று மத்திய அமைச்சா் குற்றஞ்சாட்டினாா்.

மாநில அமைச்சா் மோஹிந்தா் பகத்தும் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, மனோரஞ்சனை சந்தித்துப் பேசினாா். அவா் கூறுகையில், ‘பஞ்சாபின் வளா்ச்சியை ஜீரணிக்க முடியாத சமூக விரோதிகள், இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளனா். மாநிலத்தில் அமைதி-நல்லிணக்கம் சீா்குலைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.

முதல்வா் பதவி விலக வலியுறுத்தல்

ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் சமீப காலமாக காவல் துறை முகாம்களைக் குறிவைத்து வெடிகுண்டு வீச்சு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போது முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிா்க்கட்சிகள், முதல்வா் பகவந்த் மான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

‘பாஜக மூத்த தலைவரின் வீட்டில் நடத்தப்பட்ட வெடிகுண்டு வீச்சு சம்பவம், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டதை உணா்த்துகிறது. பயங்கரவாதம் மற்றும் அராஜகத்தின் ‘இருண்ட காலத்துக்கு’ பஞ்சாப் தள்ளப்படுகிறது. முதல்வரின் செயலற்றத் தன்மை அதிா்ச்சியளிக்கிறது. அவா் தாா்மீக பொறுப்பேற்று, உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக் வலியுறுத்தினாா். இதே கோரிக்கையை சிரோமணி அகாலி தளமும் முன்வைத்துள்ளது.

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க