செய்திகள் :

பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு: அர்ஜுன் ராம் மேக்வால்

post image

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. அப்போது மக்களவை, மாநிலங்களவையின் அனைத்து எம்.பி.க்களுக்கும் அவைக்கு வர வேண்டும்.

பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடையும். இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.

மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் விவாதங்கள் நடைபெற வேண்டும். புதிதாக பதவியேற்ற எம்.பி.க்களுக்கு அவைகளில் பேச வாய்ப்பளிக்கப்படும். இதற்காக எதிர்க்கட்சிகளிடமும் கோரிக்கை விடுப்போம். அனைத்து எம்.பி.க்களும் அவை செயல்பட அனுமதிக்க வேண்டும். இது ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிக்கும் உதவும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, வக்ஃபு வாரிய திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கைகள் இந்த கூட்டத்தொடரின்போது அவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார். மதம் மாறி திருமணம் செய்ய காதலர் வீட்டில் சம்மதிக்காத நிலையில், பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின... மேலும் பார்க்க

'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர்

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனைய... மேலும் பார்க்க

சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, ப... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகள்: 9 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நி... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம்

கொல்கத்தா பெண் மருத்துவா் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு... மேலும் பார்க்க