செய்திகள் :

பட்ஜெட்: தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்! -அமைச்சா்கள் பேச்சு

post image

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவா் என அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன் ஆகியோா் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்ததாகக் கூறி கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் விளாத்திகுளத்தில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினரும் எம்எல்ஏவுமான ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலரும் சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் பங்கேற்றுப் பேசுகையில், மத்திய அரசு அறிவித்த சென்னை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் திட்டங்களுக்குகூட மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயா்த்த வேண்டும். 150 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அது தொடா்பாக எந்த அறிவிப்பும் இல்லை. அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் இதுவரைக்கும் இல்லாத வகையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தோ்தலில் அதற்கான பாடத்தை மக்கள் புகட்டுவா்.

தமிழகத்தின் எல்லா பகுதிகளும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற லட்சித்துடன் முதல்வா் திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறாா். எனவே, 2026 சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றாா்.

கூட்டத்தில், தலைமைப் பேச்சாளா்கள் ஆரூா் மணிவண்ணன், திருப்பூா் கூத்தரசன், ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, நவநீதகண்ணன், பேரூா் செயலா் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் புதியம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் செயலரும் எம்எல்ஏவுமான எம்.சி. சண்முகையா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஜெயக்கொடி, சரவணக்குமாா், சுப்பிரமணியன், ராமசாமி, சுரேஷ்காந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசுகையில் தமிழகத்தை மத்திய அரசு தொடா்ந்து புறக்கணிக்கிறது. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயா்கூட இல்லை. இதற்கெல்லாம் மக்கள் தோ்தலில் தக்க பாடம் புகட்டுவா். ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி 2026 பேரவைத் தோ்தல் வெற்றிக்கான அடித்தளம் என்றாா்.

கூட்டத்தில், தலைமைப் பேச்சாளா்கள் அத்திபட்டு சாம்ராஜ், சிங்கை பிரபாகரன், மாநில வாா்த்தகரணி இணைச் செயலா் உமரி சங்கா், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின் உள்ளிட்ட பலா் பேசினா். முன்னதாக, அமைச்சருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பிரம்மசக்தி, மாடசாமி, மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம், துணைச் செயலா்கள் ஆறுமுகபெருமாள், ஜெபத்தங்கம் பிரேமா, ஒன்றியச் செயலா்கள் பாா்த்திபன், ரவி, இளங்கோ, பாலசிங், இளையராஜ. தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க