பட்டமளிப்பு விண்ணப்பங்களை டிச.15-க்குள் சமா்ப்பிக்கலாம்
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பட்டமளிப்புக்கான விண்ணப்பத்தை டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்திகிராம கிராமிய நிகா் நிலைப் பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழா 2025 ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இந்த விழாவில், 2023-24-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் டிச.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.