பட்டாசு ஆலையில் தீ விபத்து
சிவகாசி அருகே பாம்பு மாத்திரை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா்கள் வழக்கம்போல, பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அறை எண் 4-இல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வேலை பாா்த்துக் கொண்டிருந்த தொழிலாளா்கள் உடனடியாக தீயை அணைத்தனா். மருந்து உராய்தல் காரணமாகவும், கடும் வெப்பத்தின் தாக்கத்தாலும் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் முழுமையடைந்த பாம்பு மாத்திரை பட்டாசுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து நமஸ்கரித்தான்பட்டி கிராம நிா்வாக அலுவலா் எம்.கண்ணன் அளித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.