செய்திகள் :

பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு: கார்கே கண்டனம்!

post image

பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பாஜக அரசு திட்டமிட்டு குறைத்து வருவதாகவும், இதனால் இளைஞர்களின் கல்வி வாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நாட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பாஜக அரசு குறைத்துள்ளது வெட்கக்கேடானது. அரசு புள்ளிவிவரங்களின்படி அனைத்து உதவித்தொகைகளிலும் ஆண்டுதோறும் சராசரியாக 25 சதவீதம் குறைவான நிதியை மட்டுமே செலவிட்டுள்ளது

பின்தங்கிய மாணவர்களுக்குச் சரியான ஆதரவு வழங்கப்படாவிட்டால், நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை எவ்வாறு உறுதி செய்யும்? நாட்டின் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், அவர்களின் திறன்கள் ஊக்குவிக்கப்படாவிட்டால், நம் நாட்டின் இளைஞர்களுக்கு எப்படி வேலைகளை உருவாக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, ராகுல் காந்தி பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகளைக் கடுமையாகச் சாடினார், இரண்டும் அரசியலமைப்பிற்கு எதிரானவை என்று கூறினார்.

இந்தியாவில் சித்தாந்தப் போராட்டம் நடந்து வருகிறது. ஒருபுறம், காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை நம்புகிறது, அதற்காகப் போராடுகிறது. மறுபுறம், இந்திய அரசியலமைப்பை, பி.ஆர். அம்பேத்கர், மகாத்மா காந்தியின் அரசியலமைப்பை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக அதைப் பலவீனப்படுத்தி, அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றன.

இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தியாவைப் பற்றிய சிந்தனையாகும். இந்த அரசியலமைப்பில் இந்தியாவின் சிறந்த ஆளுமைகளின் குரலும் சிந்தனையும் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க