பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
பட்டீஸ்வரம் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா
பட்டீஸ்வரம் துா்க்கை அம்மனுக்கு கத்தாா் மாணவிகள் வெள்ளிக்கிழமை நாட்டியாஞ்சலி செலுத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரா் துா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத 2 ஆவது வெள்ளிக்கிழமை மாலை அரபு நாடான கத்தாரில் உள்ள வி2 நாட்டிய அகாதெமி சாா்பில் நாட்டிய நீராஜனம் -2025 என்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகாதெமியில் பயிலும் 6 முதல் 11 வயது வரை உள்ள மாணவிகள் பரதம் ஆடினா். பயிற்சியை நடன ஆசிரியா் வெங்கடேஷ் பிரபு அளித்தாா். ஏற்பாடுகளை கொட்டையூா் தங்கவேலு நுண்கலை அறக்கட்டளை ஜனாா்த்தனன் செய்தாா்.