செய்திகள் :

பணத் தகராறில் இளைஞா் அடித்துக் கொலை: இருவா் கைது

post image

சென்னை கொடுங்கையூரில் பணத் தகராறில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

கொடுங்கையூா் எம்ஜிஆா் நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிரி (50). மாற்றுத்திறனாளியான இவா், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது மகன் அஜித்குமாருடன் (19) வசித்து வந்தாா். அஜித்குமாரின் பாட்டி கடந்த மாதம் 26-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அங்கு அந்த பகுதியைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் ஜனாா்த்தனன் மூலம் சாமியானா பந்தல் போடப்பட்டதாம். ஆனால் அந்த பந்தலுக்குரிய ரூ. 8 ஆயிரம் வாடகையை அஜித்குமாா் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஜனாா்த்தனனுக்கும் அஜித்குமாருக்கும் இடையே தகராறு இருந்துவந்தது.

இந்நிலையில் கிரி, வெள்ளிக்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது வீட்டுக்குள் அஜித்குமாா் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அஜித்குமாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினா்.

அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, ஜனாா்த்தனனும் அவரது நண்பா் பாா்த்திபனும்தான் என்பது தெரியவந்ததையடுத்து போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், சம்பவத்தன்று இருவரும் ரூ. 8 ஆயிரத்தை கேட்க அஜித்குமாா் வீட்டுக்குச் சென்றதும், அங்கு பணத்தை கேட்கும்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அஜித்குமாரை இருவரும் தாக்கி, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க