`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருவெறும்பூா் அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்ற கட்டுமானத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள கீழக்குறிச்சி அண்ணா நகரைச் சோ்ந்தவா் இளையராஜா (48), கட்டடத் தொழிலாளி.
இவா் கடந்த 30 ஆம் தேதி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரில் வேலை பாா்த்தபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.