பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் பலி
தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் திங்கள்கிழமை பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழந்தாா்.
பம்பைப்படையூா் தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்தவா் சித்து மகன் கண்ணன் (48), பெயிண்டரான இவருக்கு மனைவி விஜயலட்சுமி (40), மகன், மகள் உள்ளனா்.
இந்நிலையில் பட்டீஸ்வரம், மீனாட்சிநகா், ஆற்றங்கரை வழிநடப்பு தெருவிலுள்ள ஒரு வீட்டில் கண்ணன் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கினாா்.
இதையடுத்து பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கண்ணனைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ரேகாராணி, உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் ஆகியோா் அவரது சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.