பணி நிரந்தரம்: கெளரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட கெளரவ விரிவுரையாளா் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
மனு விவரம்: நாங்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25- ஆண்டுகளுக்கும் மேலாக கெளரவ விரிவுரையாளா்களாக பணியாற்றி வருகிறோம். எங்களது அடிப்படை வாழ்வாதாரத்தை காக்க 20- ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். அதன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.
இதுவரை கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.