பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள்
பாரதிய ஜனசங்க தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 109-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமையில் நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன், கட்சியின் மாநில பொதுச் செயலா்கள் மோகன்குமாா், லஷ்மிநாராயணன், மாநில பொறுப்பாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.