உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
பண்ருட்டியில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்
பண்ருட்டியில் சிக்னல் கம்பங்களில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை அகற்றினா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிக்னல் கம்பத்தில் இருந்த விளம்பரப் பதாகை அறுந்து விழுந்ததில், சாலையில் சென்ற ஆசிரியா் காயமடைந்தாா்.
இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்னல் கம்பங்களில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றி வருகின்றனா்.
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு, கும்பகோணம் சாலை சிக்னல் கம்பங்களில் இருந்த விளம்பரப் பதாகைகளை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் தலைமையில் உதவி ஆய்வாளா் மகேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் மணிவண்ணன் மற்றும் போக்குவரத்து காவலா்கள் அகற்றினா்.