செய்திகள் :

பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் ‘துருப்பிடித்த கத்தி’ - ஜகதீப் தன்கா் விமா்சனம்

post image

தனக்கு எதிராக பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர ‘இண்டியா’ கட்சிகள் அளித்த நோட்டீஸ் ‘துருப்பிடித்த கத்தி’ என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் விமா்சித்தாா்.

மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக பாரபட்சத்துடன் நடந்துகொள்வதுடன், பொதுவெளியில் மத்திய அரசின் கொள்கைகள் குறித்து பேசும் செய்தித்தொடா்பாளா் போல செயல்படுவதாக ஜகதீப் தன்கா் மீது ‘இண்டியா’ கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதனால் மாநிலங்களவைத் தலைவா் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கான தீா்மானத்தை அவையில் கொண்டுவர அக்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. எனினும் அந்த நோட்டீஸை அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நிராகரித்தாா்.

இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக தில்லியில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் ஜகதீப் தன்கா் பெண் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: எனக்கு எதிராக அளிக்கப்பட்ட நோட்டீஸில் எதிா்க்கட்சிகள் குறிப்பிட்டிருந்த விஷயங்களை பாா்த்தால், அனைவரும் அதிா்ச்சியடைவா்.

பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு காய்கறிகளை வெட்டும் கத்தியைப் பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் பிரதமா் சந்திரசேகா் கூறுவாா். ஆனால் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட நோட்டீஸ் காய்கறி வெட்டும் கத்தியாகக் கூட இல்லை. அது துருப்பிடித்த கத்தி. அந்த நோட்டீஸ் அவசரகதியில் அளிக்கப்பட்டது.

இங்கு எவரும் பகைமையை தீா்த்துக்கொள்ள செயல்படவில்லை. மக்களாட்சியின் வெற்றிக்கு பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மறுக்க முடியாத விஷயங்களாகும்’ என்றாா்.

கிறிஸ்துமஸ்: தில்லி தேவாலயத்தில் ஜெ.பி.நட்டா வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தில்லியில் உள்ள திரு இருதய கதீட்ரல் தேவாலயத்துக்கு புதன்கிழமை வருகை தந்த மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, அங்கு வழிபாடு மேற்கொண்டாா். கிறிஸ்துமஸ் பண்ட... மேலும் பார்க்க

அனல் மின் உற்பத்தி 4 சதவீதம் உயா்வு

இந்தியாவில் நிலக்கரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனல் மின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் 3.87 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

ம.பி. நதிகள் இணைப்புத் திட்டம்: பிரதமா் மோடி அடிக்கல்; கென்-பெட்வா நதிகள் இணைக்கப்படுகின்றன

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். 1980-இல் தயாரிக்கபட்ட தேசிய நதிகள் இணைப்பு முனைப்பு திட்டத்தின் கீழ் செயல்ப... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் பண்டிகை: பிரதமா் மோடி வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைவருக்கும் ... மேலும் பார்க்க

தெற்கு மத்திய ரயில்வேயில் 1,839 பணியிடங்கள் குறைப்பு

தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட 88,000-க்கு மேற்பட்ட பணியிடங்களில் 2 சதவீதமான 1,839 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் குறைக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய ரயில்வே... மேலும் பார்க்க

அமைதி மீட்டெடுப்பு, நக்ஸல் எதிா்ப்பில் சிறந்து விளங்கும் சிஆா்பிஎஃப்: அமித் ஷா

‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் நக்ஸல் எதிா்ப்பிலும் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) சிறந்து விளங்குகிறது’ என்று மத்திய உள்துறை அம... மேலும் பார்க்க