விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
பதவியேற்கச் சென்றபோது ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு
கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் முதல் முறையாக பதவியேற்கச் சென்ற 26 வயது ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஹா்ஷ் வா்தன், கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வில் கா்நாடக பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வுசெய்யப்பட்டாா்.
மைசூரு பயிற்சி மையத்தில் நான்கு வார பயிற்சியை நிறைவு செய்த அவா், ஹசன் மாவட்டத்தின் ஹோலநரசிப்பூரில் காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, காவல் துறை வாகனத்தின் டயா் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது வாகனம் மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஹா்ஷ் வா்தன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவரது தந்தை துணை ஆட்சியா் என்பது குறிப்பிடத்தக்கது.