செய்திகள் :

பதான்கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!

post image

பஞ்சாபின் பதான்கோட் அருகில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தியா மீது தாக்குதல் நடத்திய எஃப்-16 விமானம் மற்றும் ஜேஎஃப்-17 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் விமானம் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை

கராச்சி துறைமுகத்தை தாக்கிய ஐஎன்எஸ் விக்ராந்த்!

கராச்சி துறைமுகத்தை இந்திய போர்க் கப்பலான விக்ராந்த் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோ வெளியீடு!

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், இந்தியா மீது நேற்றிரவு முதல் பா... மேலும் பார்க்க

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க