செய்திகள் :

பதிவாளர் அலுவலக கழிவறையில் ரூ.3 லட்சம்; லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பறிமுதல்; நடந்தது என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நஞ்சியம்பாளையம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உமா மகேஷ்வரி என்பவர் சார் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த அலுவலகத்தில் முறைகேடாகப் பத்திரப் பதிவு நடைபெறுவதாகவும், பத்திரப் பதிவுக்கு இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தாராபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில், அவருக்குச் சொந்தமான நிலத்தை வேறொருவர் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையிட வந்தபோது, அதை முன்கூட்டியே அறிந்த சார் பதிவாளர் உமா மகேஷ்வரி உடல்நிலை சரியில்லை என்று பாதியிலேயே விடுப்பு எடுத்த சம்பவமும் நடைபெற்றது.

லஞ்சம்

இந்நிலையில், தாராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்குத் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் மாலை 3 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறையிலிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோல, அலங்கியம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.50 லட்சமும், சிவசுப்பிரமணி என்ற பத்திர எழுத்தரின் உதவியாளர் நடராஜிடமிருந்து ரூ.3000 என மொத்தம் கணக்கில் வராத ரூ. 4.53-லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உமா மகேஷ்வரி

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், "தாராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கழிவறையிலிருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.4.53 லட்சத்தைப் பறிமுதல் செய்துள்ளோம்.

இதுதொடர்பாக சார் பதிவாளர் உமா மகேஷ்வரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பத்திர எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`வேல்முருகன் மாதிரி நாங்க பேசணும்னு எதிர்பார்க்கக் கூடாது..!’ - விசிக ஆளூர் ஷாநவாஸ் ஆவேசம்

``சட்டமன்றத்தை தி.மு.க அரசு மிகுந்த நாகரிகத்தோடு நடத்தியதாக சொல்கிறீர்கள்... பிறகு ஏன் அவை நடவடிக்கைகளை நேரலை செய்யவில்லை?”``சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்வோம் என்பது 2021-ல் தி.மு.க-வின் தேர்தல் வா... மேலும் பார்க்க

``சீமானின் 8% வாக்குகளெல்லாம் இப்போது குட்டிச் சுவராகிவிட்டது!" - சொல்கிறார் நாஞ்சில் சம்பத்

``பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது மத்திய அரசு. இதில் பா.ஜ.க-வுக்கு அரசியல் அஜெண்டா இருப்பதாக வீண் பழி சுமத்துகிறீர்களா?”``காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்வதும், நா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் விடுதலை!

6 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவு கொலையும் செய்து, தனது சொந்த தாயையும் அடித்துக் கொலை செய்த தஷ்வந்த் வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.2017-ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 ... மேலும் பார்க்க

"ஊர்ந்து எனச் சொன்னால் உறுத்துகிறதா? தவழ்ந்து என மாற்றுங்கள்" - அதிமுகவின் அமளிக்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 29) காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான கேள்வி - பதில் விவாதங்கள் நடைபெற்றன.அப்போது சட்டம் ஒழுங்கை சரியில்லை... மேலும் பார்க்க

இலையில் மதுபாட்டிலுடன் விருந்து; "போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக கூட்டமே சாட்சி" - இபிஎஸ்

கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைத்தளங்களில் விருந்துடன் இலையில் மதுபாட்டிலும் வைத்து விருந்து நடந்த காணொலி வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம... மேலும் பார்க்க