செய்திகள் :

பயிற்சியாளர் பொறுப்புக்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல: முன்னாள் இந்திய வீரர்

post image

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவதற்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி வரலாற்று தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதையும் படிக்க: சாம் கான்ஸ்டாஸால் தொடக்க ஆட்டக்காரராக நீடிக்க முடியாது; ரிக்கி பாண்டிங் கூறுவதென்ன?

இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை இழந்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்திய அணியின் ஆதிக்கத்தை நியூசிலாந்து முடிவுக்கு கொண்டு வந்தது. அண்மையில், இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் தொடரை இழந்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது.

கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல

இந்திய அணியின் மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவதற்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மனோஜ் திவாரி (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: போட்டிகளின் முடிவுகளைப் பாருங்கள். போட்டிகளின் முடிவுகள் பொய் சொல்லாது. தோல்வி எண்ணிக்கைகள் பொய் சொல்லாது. ராகுல் டிராவிட் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதனை கௌதம் கம்பீரால் செய்ய இயலவில்லை. இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில், இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் பயிற்சியளிப்பதில் எந்த ஒரு அனுபவத்தையும் நான் பார்க்கவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் அவருக்கு எந்தவொரு பயிற்சியளிக்கும் அனுபவமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸி. அணியில் கேமரூன் கிரீன்?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு அனுபவம் வாய்ந்த பலரும் இருக்கின்றனர். விவிஎஸ் லக்‌ஷ்மண் மற்றும் சாய்ராஜ் பஹுதுல் போன்றோர் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. ராகுல் டிராவிட்டின் ஓய்வுக்குப் பிறகு, இதுபோன்ற அனுபவமிக்கவர்கள் வரிசையில் இருக்க கௌதம் கம்பீர் எப்படி அந்த பொறுப்புக்கு வந்தார் என்று தெரியவில்லை. அதனால், இந்திய அணி பல தோல்விகளை சந்தித்து வருகிறது.

ஐபிஎல் முடிவுகளை வைத்து ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பது தவறு. என்னை பொருத்தவரையில், ஐபிஎல் முடிவுகளை வைத்து ஒருவரை தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பது சரியான தேர்வாக இருக்காது எனக் கூறுவேன். கௌதம் கம்பீருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ அணிக்கு ஆலோசனை வழங்கியுள்ள அனுபவம் மட்டுமே இருக்கிறது. அவருக்கு பயிற்சியாளராக எந்த ஒரு அனுபவமும் கிடையாது.

இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்காவும் புறக்கணிக்கிறதா?

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் போன்ற வீரர்கள் சரியாக விளையாடாதபோது, அவர்களுக்கு கௌதம் கம்பீர் நம்பிக்கையளித்தார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், சந்திரகாந்த் பண்டித் அணியின் பயிற்சியாளராக என்ன செய்து கொண்டிருந்தார் என நினைக்கிறீர்கள்? கொல்கத்தா வெற்றி பெற்றதில் சந்திரகாந்த் பண்டித்துக்கு பங்கில்லை எனக் கூறிவிடுவீர்களா? என்றார்.

கௌதம் கம்பீர் சுயநலமற்றவர்..!ஆதரவாக பேசிய ஹர்ஷித் ராணா!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஆதரவாக ஹர்ஷித் ராணா பேசியுள்ளார். கம்பீர் தலைமையில் பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-3 என மோசமாக தோல்வியுற்றது. சொந்த மண்ணில் இந்தியா 0-3 எ... மேலும் பார்க்க

சாம் கான்ஸ்டாஸால் தொடக்க ஆட்டக்காரராக நீடிக்க முடியாது; ரிக்கி பாண்டிங் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக நீடிப்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர... மேலும் பார்க்க

கவுன்டி போட்டிகளில் விளையாட விரும்பும் விராட் கோலி?

இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளான கவுன்டி போட்டிகளில் விராட் கோலி விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரின் போது இந்திய கிரிக்கெட... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸி. அணியில் கேமரூன் கிரீன்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற முழு உடல்தகுதியுடன் இருப்பார் என ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி நம்பிக்கை தெரிவித்து... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்காவும் புறக்கணிக்கிறதா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி வலியுறுத்தியுள்ளார்.ஐசிசி சாம்பி... மேலும் பார்க்க

இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

அயர்லாந்துக்கு எதிராக இந்திய மகளிரணியின் ஆதிக்கம் தொடருமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.அயர்லாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில... மேலும் பார்க்க