செய்திகள் :

பயிற்சியில் பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு லித்துவேனியா அரசு மரியாதை!

post image

லித்துவேனியா நாட்டில் ராணுவப் பயிற்சியின்போது பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு அந்நாட்டு அரசும் மக்களும் மரியாதை செலுத்துகின்றனர்.

ஐரோப்பிய நாடான லித்துவேனியாவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் முதலாவது கவசப் படைப் பிரிவு போர் அணியைச் சேர்ந்த 4 வீரர்களின் ராணுவ வாகனம் கடந்த வாரம் மாயமானது.

இதனைத் தொடர்ந்து, லித்துவேனியா, போலந்து மற்றும் அமெரிக்க ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து பெலாரஸ் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பயிற்சித் திடலில் வனப்பகுதி மற்றும் சதுப்பு நிலங்களில் தீவிரத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31 அன்று சதுப்பு நிலத்தில் புதைந்த நிலையில் அவர்களது ராணுவ வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு 4 வீரர்களும் பலியானதாக உறுதி செய்யப்பட்டது. பின்னர், கடந்த ஏப்.1 அன்று 4வது வீரரின் உடலும் மீட்கப்பட்டது.

பலியான ராணுவ வீரர்களுக்கு ஏராளமான லித்துவேனிய மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பலியான அமெரிக்க ராணுவ வீரர்களான ட்ராய் எஸ்.க்னட்சன் (வயது 28), ஜோஸ் டுவனெஸ் ஜூனியர் (25), எட்வின் ஃப்ரான்கோ (25) மற்றும் டண்டே டி. டட்டியானோ (21) ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் அமெரிக்கா கொண்டு செல்லப்படுவதற்கு முன் லித்துவேனியா தலைநகர் விலினியஸில் இன்று (ஏப்.3) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தில் லித்துவேனிய அதிபர் கிடானஸ் நவுசேதா, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மதகுருக்கள், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் ஆகியோர் பலியான ராணுவ வீரர்களுக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் அவர்களது கூட்டாளர்களை ஆதரிக்கும் ராணுவ நடவடிக்கையான அட்லாண்டிக் ரிசால்வின் ஒரு பகுதியாக ஜனவரி மாதம் அமெரிக்காவின் முதலாவது கவசப் படைப் பிரிவு போர் அணியைச் சேர்ந்த 3,500 வீரர்கள் போலந்து உள்ளிட்ட பால்டிக் நாடுகளுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:புதிய ஊழலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர்?

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.தாய்லாந்து பயணத்தை முடித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக இலங்கை, தலைநகர் கொழும்பு நகரத்துக்கு இன்று (ஏப்.4) மாலை சென்றடை... மேலும் பார்க்க

கொலையுண்ட மனைவி உயிருடன் கண்டுபிடிப்பு! 3 ஆண்டுகள் கழித்து கணவர் விடுதலை!

கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மனைவி உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதால் 3 ஆண்டுகள் கழித்து அவரது கணவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். குடகு மாவட்டத்தின் பசவனஹல்லி பழங்குடியினர்... மேலும் பார்க்க

ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட் மீது 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லண்டன் நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பிரபல பாப் பாடக... மேலும் பார்க்க

மணிப்பூரில் அதிகரிக்கும் ரேபிஸ் பாதிப்பு! கட்டுப்பாடுகள் விதிப்பு!

மணிப்பூரின் சூரசந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமத்தில் அதிகரித்து வரும் ரேபிஸ் நோய் பாதிப்பினால் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் நியூ ஸோவெங் கிராமத்தில் ரேபிஸ் நோய்... மேலும் பார்க்க

மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!

தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் துவங்கும் அபாயம் நிலவுவதால் அந்நாட்டு அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ரெ... மேலும் பார்க்க

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.அசாம் மாநிலத்தில் சிறந்த குடிமக்களுக்கு அஸ்ஸாமீஸ் புத்தாண்டான ரொங்காலி பிஹு பண்டிகையை முன்னிட... மேலும் பார்க்க