Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
‘பரந்தூா் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்’
சென்னை: ‘விமான நிலைய திட்டத்துக்கு எதிராக அறப்போராட்டம் நடத்திவரும் பரந்தூா் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்’ என தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.
சென்னைக்கான கூடுதல் விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டம் சுமாா் 1,000 நாள்களைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக தவெக தலைவா் விஜய், ‘எக்ஸ்’ தள பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
‘மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாள்களைக் கடந்து அறப்போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூா் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.