செய்திகள் :

பரமக்குடி: நீதிபதியை நோக்கி வீசப்பட்ட காலணி... மானாமதுரை எம்.எல்.ஏ சகோதரர் கைது!

post image

மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தமிழரசியின் சகோதரர் ரமேஷ் பாபு. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக ரமேஷ்பாபுவின் மனைவி ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் விருதுநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். இதனால் ரமேஷ் பாபு தனது வீட்டிற்கு செல்லாமல் சாலை ஓரங்களில் தங்கி உறங்கும் நிலையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி பாண்டி மகாராஜா வழக்குகளை விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வளாகத்தில் சுற்றி திரிந்த ரமேஷ் பாபு, திடீரென நீதிபதியை அவதூறாகப் பேசியதுடன் தான் அணிந்திருந்த காலணியை கையில் எடுத்து நீதிபதியை நோக்கி வீசியுள்ளார். அந்த காலணி, வழக்கறிஞர்கள் அமரும் இடத்தில் விழுந்தது.

ரமேஷ் பாபு
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

இதையடுத்து ரமேஷ் பாபுவை பிடித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் காலணியை வீசிய ரமேஷ்பாபு, முன்னாள் அமைச்சரும், மானாமதுரை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான தமிழரசியின் சகோதரர் என தெரிய வந்தது. மேலும் குடும்பத்தினர் ஆதரவு இன்றி சுற்றி திரிவதால் மனநல பாதிப்பு குறைபாடு உடையவர் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்ற உதவியாளர் மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில் ரமேஷ் பாபுவை கைதுசெய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்: குடி போதையால் நேர்ந்த விபரீதம்... நண்பனைக் கொன்ற வாலிபர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தில்லைநாச்சியம்மன் கோயில் குடியிருப்புப் பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவரின் மகன் குழந்தை வேலு. இவருக்குத் திருமணமாகி மனை... மேலும் பார்க்க

``கல்வித்துறையில் அரசு வேலை..'' 34 பேரிடம் ரூ 1.11 கோடி வசூல் -2 பெண்கள் கைது!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் பொறியாளர் சுந்தரவிக்னேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கல்வித்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக தான் உள்பட 33 பேரிடம் 1.11 கோடி ரூ... மேலும் பார்க்க

Saif Ali Khan: திருடனுடன் போராடிய சைஃப் அலிகான்; தப்பிக்கவிட்ட பணியாளர்கள்... விசாரணையில் பகீர்!

ஒளிந்து கொண்ட ஆண் பணியாளர்கள்...மும்பை பாந்த்ராவில் வசிக்கும் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மர்ம நபரால் தாக்கப்பட்டார். நள்ளிரவில் வீட்டிற்குள் வந்த மர்ம நபர் சைஃப் அலிகானை பிளேடால் தாக்கிவிட்டு தப... மேலும் பார்க்க

Baba Ramdev: மீண்டும் சிக்கலில் பாபா ராம்தேவ்; கைது வாரண்ட் பிறப்பித்த கேரள நீதிமன்றம்!

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவின் மருந்துப் பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கூட இந்த நிறுவனத... மேலும் பார்க்க

சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்... கண்டுக்கொள்ளுமா காவல்துறை!

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் தான் போதை வஸ்துக்களை உட்கொண்டதால் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!சேலம் மாநகரத்தி... மேலும் பார்க்க

கோவை: ஓடைக்குள் இடிந்து விழுந்த வீடு - கண் இமைக்கும் நேரத்தில் திக்... திக்..!

கோவைரத்தினபுரி பகுதியில் சங்கனூர் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் கரையில் சுரேஷ் என்பவர் கான்கிரீட் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த சில நாள்களாக சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்ற... மேலும் பார்க்க