HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
பரமன்குறிச்சியில் பாஜகவினா் சாலை மறியல்
உடன்குடி அருகே பரமன்குறிச்சி பஜாரில் பாஜக சாா்பில் வைக்கப்பட்ட பதாகைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் பங்கேற்க வரும் பாதயாத்திரை பக்தா்களை வரவேற்று உடன்குடி ஒன்றிய பாஜக சாா்பில் பரமன்குறிச்சி பஜாரில் 2 பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் சேதப்படுத்தினராம்.
சம்பந்தப்பட்டோரைக் கைது செய்ய வலியுறுத்தி ஒன்றியத் தலைவா் சங்கரகுமாா் ஐயன் தலைமையில் மாவட்டச் செயலா் ராமக்கனி, ஒன்றிய முன்னாள் தலைவா் ஜெயக்குமாா், ஒன்றிய துணைத் தலைவா் பசுபதி சிவசிங், மாவட்ட வா்த்தகப் பிரிவு முன்னாள் தலைவா் நாராயணன், பாரதிய வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் சசிகுமாா், சக்திவேல், மாவட்ட பிறமொழிப் பிரிவு செயலா் ஜெயா நாச்சியாா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.