செய்திகள் :

பராசக்தி படப்பிடிப்பு: இலங்கை சென்ற சிவகார்த்திகேயன்!

post image

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கை சென்றடைந்துள்ளார்.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர்.

பின், முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.

யாழ்பாண நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தங்களது அதிகாரபூர்வ பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்கள்.

அந்தப் பதிவில்,“தென்னிந்தியாவின் சினிமா நடிகர் சிவகார்த்திகேயனை வரவேற்பத்தில் மகிழ்ச்சியடைகிறோம். சென்னை - கொழும்புவிற்கு செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை உபயோகித்ததுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். இதில் அதர்வா, ஸ்ரீ லீலா, பிரீத்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு.... மீண்டும் நடிக்கும் பூவே உனக்காக சங்கீதா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சங்கீதா நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் ஸ்நேகிதன் ஒரு ப... மேலும் பார்க்க

அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்..! மெஸ்ஸிக்குப் பிறகு புதிய சாதனை!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து அசத்தியுள்ளார் ரபீனியா. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் பார்சிலோனா அணி பென்பிகாவை 3-1 என வென்றது.இந்தப் ப... மேலும் பார்க்க

விரைவில் இதயம் -2 தொடர்! நடிகர்கள் குறித்து அறிவிப்பு!

தமிழ் சின்ன திரையில் மேலுமொரு தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது. மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இதயம் தொடரின் மற்றொரு பாகமாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.இதயம் -2 என்ற பெயரில் ஒளிபரப்பாகவுள்ள இத்த... மேலும் பார்க்க

புதிய தோற்றத்தில் நகுல்!

நடிகர் நகுல் புதிய தோற்றத்திலிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நகுல் சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு உடல் எடையைக் குறைத்து, காதலில் விழுந்தேன் படத்தின் மூலம்... மேலும் பார்க்க

விரைவில் முடிகிறது ரோஜா -2 தொடர்!

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரோஜா 2 தொடர் விரைவில் முடியவுள்ளது. தொடர் முடியவுள்ள தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பார்க்க

நோன்பிருந்தும் சிறப்பாக விளையாடி வரலாற்றுச் சாதனை படைத்த 17 வயது வீரர்..!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இளம் வீரர் (17) லாமின் யமல் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் பார்சிலோனா அணி பென்பிகாவை 3-1 என வெ... மேலும் பார்க்க